என்னை நானா அவருடன் ஒப்பிட சொன்னேன்: இந்திய வீரரை விளாசிய ஹர்திக் பாண்டியா

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை என இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வரும் நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது.

மூன்றாவது போட்டி தற்போது நடந்து வரும் நிலையில் முதல் இன்னிங்சில் இந்தியா 329 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் 161 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 6 ஓவர்கள் வீசி 28 ஓட்டங்களை மட்டும் விட்டு கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஹர்திக் பாண்டியாவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஆல்ரவுண்டராக பாண்டியா சிறப்பாக செயல்படவில்லை, அவரை கபில்தேவுடன் ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

ஒரே இரவில் கபில்தேவ் ஆகமுடியாது என கூறியிருந்தார்.

இதற்கு தனது சிறப்பான ஆட்டம் மூலம் பதில் தந்துள்ள பாண்டியா கூறுகையில், விமர்சகர்களுக்காக நான் விளையாடவில்லை, நாட்டுக்காக விளையாடுகிறேன்.

விமர்சகர்கள் எதையாவது பேசுவதற்கு சம்பளம் வாங்குகிறார்கள்.

கபில்தேவுடன் என்னை ஒப்பிடுவதை பற்றி கேட்கிறீர்கள், நானா அவருடன் ஒப்பிட சொன்னேன்.

நான் அவருடன் என்னை ஒப்பிட்டதில்லை, நான் கபில்தேவ் ஆக ஆசைப்பட்டதில்லை.

நான் பாண்டியாவாக இருக்கிறேன், என்னை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...