பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: பிரபல கிரிக்கெட் வீரர் அறிவிப்பு

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை மற்றும் பெருவெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்ஸன் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்ஸன். ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல் அணிக்காக விளையாடி வருகிறார்.

வரலாறு காணாத பெருவெள்ளத்தால் தத்தளித்துவரும் மக்களுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக 10 லட்சம் ரூபாய் தொகையை சஞ்சு சாம்ஸன் வழங்கியுள்ளார்.

குறித்த தொகையை சஞ்சுவின் பெயரில் அவரது தந்தையும் சகோதரரும் முதலமைச்சர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர்.

கேரள பெருவெள்ள பேரிடருக்கு திரைப்பட நட்சித்திரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் நிதி உதவி அளித்து வந்தாலும் கிரிக்கெட் வீரர்களில் முதல் நபராக சஞ்சு சாம்ஸன் தன்னால் இயன்ற உதவியை அளித்துள்ளார் என முதலமைச்சரின் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்