இனி எப்படி ஐயா அந்த காந்த குரலை கேட்பேன்! இந்திய கிரிக்கெட் வீர்ர் ஹர்பஜன் சிங் தமிழில் உருக்கம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கருணாநிதியின் காந்த குரலை இனி எப்படி கேட்பேன் என்று தமிழில் டுவிட் செய்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் இறப்பு செய்தியை கேட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கருணாநிதி-ஜியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று நேற்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மற்றொரு இந்திய வீரரான ஹர்பஜன் சிங், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை ஐயா.முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்