டோனி- கோஹ்லி என்ன மொபைல் போன் பயன்படுத்துறாங்க! அதன் மதிப்பு இத்தனை லட்சமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணி வீரர்களான டோனி மற்றும் கோஹ்லிக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உலகளவில் உள்ளனர்.

இவர்கள் எந்த வகை உடை அணிகிறார்களோ, அதே போன்று உடை மற்றும் அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் என பலவற்றை அவர்களின் தீவிர ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று இந்திய அணி வீரர்கள் பயன்படுத்தும் மொபைல் போன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய அணியின் தலைவரான விராட்கோஹ்லி தற்போது iphone X பயன்படுத்தி வருகிறார், இதற்கு முன்பு இவர் iPhone 8 மற்றும் Blackberry Classic பயன்படுத்தினார்.

கோஹ்லி தற்போது பயன்படுத்தும் iphone X-ன் இந்திய மதிப்பு 1 லட்சத்திற்கும் மேல் உள்ளது.

இவரைத் தொடர்ந்து இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்த யுவராஜ் சிங் தற்போது ஓபோ போன் நிறுவனத்திற்கு தூதராக உள்ளார்.

இவர் பல ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தியிருந்தாலும், தற்போது iPhone 7S-ஐயே பயன்படுத்தி வருகிறார், இதன் மதிப்பு 50,000 மேல் வரும்.

அடுத்தபடியாக இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா Samsung Galaxy S8 பயன்படுத்துகிறார். இதன் மதிப்பு 45,000-க்கும் மேல் ஆகும்.

இந்திய அணியின் ஜாம்பாவானா சச்சின் டெண்டுல்கர் தற்போது யுவராஜ் சிங் பயன்படுத்தும் iPhone 7s-ஐ பயன்படுத்தி வருகிறார்.

இறுதியாக இந்திய அணியின் வெற்றித் தலைவரான டோனி தற்போது லாவா போன் நிறுவனத்திற்கு தூதராக உள்ளார். இருப்பினும் இவர் முன்னதாக Zen phone மற்றும் Blackberry Z3 பயன்படுத்தினார் தற்போது இவர் iPhone 7 Plus பயன்படுத்துகிறார்.

இதன் மதிப்பு 50,000-க்கு மேல், இவர்களுடன் எல்லாம் பார்க்கு போது அணியின் தலைவரான கோஹ்லியே மிகவும் காஸ்ட்லியான போன் பயன்படுத்துகிறார் என்பது தெரியவருகிறது.மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்