வீட்டில் இதை செய்து பாருங்க.. ரசிகர்களை குழப்பிய டோனியின் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, ரசிகர்களை குழப்பும் வகையில் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, சிறிய மிதிவண்டி ஒன்றில் Headphone, கண்ணாடி அணிந்தபடி வாயில் ஒரு மரக்கட்டையை வைத்துக் கொண்டு செல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், அந்த மிதிவண்டியில் சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனைப் பார்க்கும் போது அவர் ஏதோ ஒரு உடற்பயிற்சி செய்வது போல் உள்ளது.

இதனை ஜாலியாக வீட்டியில் செய்து பாருங்கள் என அந்த வீடியோ குறித்து டோனி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் உடற்பயிற்சி செய்கிறாரா அல்லது சாகசம் செய்கிறாரா என்கிற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்