ஓய்வு பெறும் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான்: இலங்கை அணி குறித்து கூறியது இதைதான்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

உலக கிண்ண போட்டிக்கு பிறகு ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஸ்டெயின் ஓய்வு பெறுகிறார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் பேசுகையில், இங்கிலாந்தில் 2019-ல் நடைபெறும் உலக கிண்ண போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பேன்.

உலக கிண்ண போட்டிக்கு பிறகு ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் நான் விளையாடுவதை பார்க்க முடியாது.

சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் காயம் பிரச்சினை எதுவும் இல்லாமல் விளையாடினேன். வேகமாக என்னால் பந்து வீச முடிந்தது. விக்கெட் வீழ்த்துவதில் உத்தரவாதம் கிடையாது. முழு உடல் தகுதியுடன் களம் கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கை ஆடுகளம் கடினமாக இருந்தது. இலங்கை அணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்