கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தினேஷ் கார்த்திக்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
292Shares
292Shares
lankasrimarket.com

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்த நிலையில், கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்களுக்கு அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்ட ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும், கொல்கத்தா மைதானத்தில் ஐதராபாத் அணியின் முதல் வெற்றி இதுவாகும். இந்நிலையில், தோல்விக்குப் பிறகு கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் கூறுகையில்,

‘160 முதல் 170 ஓட்டங்கள் வரை எடுத்திருந்தால் பாதுகாப்பான Score ஆக இருந்திருக்கும். இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வேகப்பந்து வீச்சாளர்கள் ‘நக்குல்’ வகை பந்துவீச்சில் கலக்கினர்.

இந்த மாதிரி பந்து வீசுவதை எங்களது பந்துவீச்சாளர்கள், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்