ரஜினியை டோனி சந்தித்தற்கு இது தான் காரணமா? வெளியான ரகசியம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி அவருடைய படத்தின் விளம்பரத்திற்காகத்தான் ரஜினியை வந்து சந்தித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது தயாரிக்கப்படும் திரைப்படங்களில் சில தமிழில் வெளியாவதால், இதை விளம்பரப்படுத்தும் விதமாக தமிழ் நாட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

உதாரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ரா ஒன் படத்தில் ஒரேயொரு காட்சியில் ரஜினிகாந்த் எந்திரன் படத்தில் வரும் சிட்டி கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். இதன் மூலம் அப்படத்திற்கு விளம்பரம் தேடினார் ஷாருக்கான்.

அக்ஷய் குமார் நடிப்பில் அண்மையில் வெளியான ருஸ்தம் படத்திற்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம் ருஸ்தமுக்கு இலவசமாக விளம்பரம் கிடைத்தது.

தமிழ் நாட்டில் படம் வெற்றி பெற வேண்டுமென்றால் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்பதை டோனி புரிந்து கொண்டதாகவும், தன் வாழ்வை சித்தரித்து வெளிவரவிருக்கும் படம் MS Dhoni: The Untold Story தமிழ் நாட்டில் வெற்றி பெற வேண்டும் என்கிற காரணத்திற்காகவும் டோனி ரஜினியை சந்தித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments