அது மட்டும் நடந்தால் போதும்! உருகும் வெள்ளி மங்கை சிந்து

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை என்றாவது ஒருநாள் சந்தித்து விட வேண்டும் என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி வென்று இந்திய நாட்டுக்கே பெருமை தேடி தந்தவர் சிந்து. அவருக்கு கோடிகள் ஒரு புறம் கோட்ட, மறுபுறம் அவரை பிரதமர் மோடி உட்பட அனைவரும் வாழ்த்து மழையால் நனைத்தனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினியும் தனது டுவிட்டர் பக்கத்தில் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து, நானும் சிந்துவின் தீவிர ரசிகர் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு சிந்துவும் பதில் நன்றியைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினியை என்றாவது ஒருநாள் பார்க்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்துள்ளார் சிந்து.

அவர் மேலும் கூறுகையில், ரஜினிகாந்தின் அந்த டுவிட் என்னுடைய அந்த நாளை முழுமையாக்கி விட்டது. அவருக்கு நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு நாள் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments