கோட்டை விட்ட தமிழர்கள்.. சாதனை படைத்த ’இரும்பு பெண்மணி’ : ஒலிம்பிக் துளிகள்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் குத்துச் சண்டை போட்டியில் கத்தார் நாட்டுக்காக விளையாடிய ஈழத் தமிழர் துளசி தருமலிங்கம் மங்கோலிய வீரரிடம் தோல்வியைத் தழுவினார்.

ஒலிம்பிக்கில் ஆடவர் 77 கிலோ பளுத்தூக்கும் போட்டியில் தமிழக வீரரான சதீஷ் சிவலிங்கம் 4ம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் சுயாதீன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குவைத்தின் பெகைத் அல் தீகானி. அங்கீகாரம் பெறாத நாடுகளின் வீரர்கள் சுயாதீன வீரர்களாக களமிறங்கலாம். இதன் படி சுயாதீன வீரராக களமிறங்கிய ராணுவ அதிகாரியான அல் தீகானி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஒலிம்பிக் நீச்சலில் மகளிருக்கான 200 மீற்றர் தனிநபர் மெட்லே பிரிவில் ஹங்கேரி வீராங்கனை கதின்கா ஹோஸ்ஜூ ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்த ஒலிம்பிக்கில், ‘இரும்பு பெண்மணி’ என்று செல்லமாக அழைக்கப்படும் 27 வயதான கதின்காவின் கழுத்தை தங்கப்பதக்கம் அலங்கரிப்பது இது 3வது முறையாகும். ஏற்கனவே 400 மீற்றர் தனிநபர் மெட்லே மற்றும் 100 மீற்றர் பேக்ஸ்டிரோக் பிரிவுகளிலும் தங்கத்தை வென்றிருந்தார்.

மகளிர் தனி நபர் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரியும், பம்பைலா தேவியும் அடுத்தடுத்து தங்களது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியைச் சந்தித்து வெளியேறினர். இதன் மூலம் இந்தியாவின் பதக்கக் கனவு இப்பிரிவில் முடிவுக்கு வந்துள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் இந்திய வீரர் மனோஜ்குமார், லாத்வியா வீரரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

மகளிருக்கான ஹொக்கி குரூப் ’பி’ லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி அவுஸ்திரேலியாவிடம் 6-1 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments