"மகிழ்ச்சி..." சென்னையில் கபாலி படம் பார்த்த மேத்யூ ஹைடன்!

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

தற்போது தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக மக்கள் மத்தியில் பரவி கொண்டிருக்கும் ஒரு பெயர் மேத்யூ ஹைடன்.

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் 'தமிழ்நாடு பிரீமியர் லீக்' போட்டியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் மேத்யூ ஹைடனுக்கும், தமிழக மக்களுக்கும் எப்போதுமே ஒரு இனம் புரியாத அன்பு இருந்து வருகிறது.

'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணிக்காக தன்னுடைய 'மங்கூஸ்' எனப்படும் பிரத்யேக மட்டையால், பந்தை அரங்கத்திற்கு வெளியே இவர் பல முறை அடித்ததே அதற்கு முக்கிய காரணம்.

திருநெல்வேலியின் பிரசித்தி பெற்ற இருட்டு கடை அல்வா, தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளமாக திகழும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தை சென்னையில் உள்ள 'ஆல்பர்ட்' திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறார்.

'கபாலி' படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பை பார்த்து வியந்து போன மேத்யூ ஹைடன், திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்களை நோக்கி "மகிழ்ச்சி..." என்று கூற, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் ஆர்ப்பரித்தனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments