இரு வேறு பண்பாடுகளா? விவாதப் பொருளான பீச் வீராங்கனைகளின் ஆடை

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

ரியோ ஒலிம்பிக்கில், பீச் வாலிபால் போட்டியில், எகிப்து, ஜேர்மன் அணிகள் மோதிய போட்டியில், வீராங்கனைகள் அணிந்திருந்த உடைகள் பற்றி பெரிய சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் போட்டியில் எகிப்து அணி வீராங்கனைகள் உடலை முழுவதும் மறைத்து உடை அணிந்து விளையாடினர்.

அதே சமயம் ஜேர்மனி அணியின் வீராங்கனைகள் பீச் உடையில் போட்டியில் பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்தப் புகைப்படங்களை ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் விவாதங்கள் அதிகரித்துள்ளன.

இந்தப் புகைப்படங்கள் இரு வேறு பண்பாடுகள் ஒன்றிணைவதை குறிக்கும் வகையில் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வேறு சிலர் இது விளையாட்டில் ஏற்பட்டுள்ள பிளவை காட்டுவதாக கூறியுள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டுக்குப் பிறகு பீச் வாலிபால் போட்டியில் தங்களது விருப்பப்படி ஆடையை அணிந்து கொள்ள வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments