வாழ்க்கை படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் டோனி: ரசிகர்கள் உற்சாகம்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட்அணியின் தலைவர் டோனி தனது வாழ்க்கையைப் பற்றிய படத்தின் ட்ரைலரை நேற்று வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் வெற்றிகரமான தலைவரான டோனி இந்திய கிரிக்கெட் அணியில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்த நிலையில்அவர் தனது வாழ்க்கையை 'MS Dhoni: The Untold Story' என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார்.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் செப்டெம்பர் 30ம் திகதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இந்தபடத்தின் ட்ரைலரை பஞ்சாப்பில் உள்ள லவ்லி பிரபஸ்னல் பல்கலையில் (LovelyProffesional University) மாணவர்கள் மத்தியில் டோனி நேற்று வெளியிட்டுள்ளார்.

இதில் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் 35,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாணவர்களின் ஆசைக்கிணங்க மேடையிலே டோனி ஹெலிகொப்டர் ஷாட்டுகளையும் ஆடி காட்டினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments