பளு தூக்கும் வீரரின் கை முறிந்தது! ஒலிம்பிக்கில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

ரியோ ஒலிம்பில் போட்டியில் 195 கிலோ எடையை தூக்கிய போது அர்மீனிய பளுதூக்கு வீரரின் கை முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் 77 கிலோ எடை பிரிவினருக்கான பளுதூக்கும் தகுதி போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற அர்மீனிய வீரர் ஆண்ட்ரானிக் கராபெட்யன் (andranik karapetyan) 195 கிலோ எடையை தூக்க முயன்றார். அப்போது அவரின் இடது முழங்கை முறிந்ததால் அவர் வலியில் துடிதுடித்தார்.

பின்னர் அவரை பத்திரமாக வெளியே அழைத்து சென்றனர். இதனால் அவரது பதக்க கனவு நிறைவேறாமல் போனது. இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸ் ஜிம்னாஸ்டிக் வீரர் சமீர் அயிட் (samir ait) ஜிம்னாஸ்டிக் போட்டிக்கான தகுதி சுற்றில் பங்கேற்ற போது அவரது இடது கால் முறிந்தது.

இதே போல் மகளிர் சைக்கிள் போட்டியில் நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை அன்னெமிக் வான் விலுடின் (Annemiek van Vleuten) விபத்தில் சிக்கி காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

REUTERS/Yves Herman
AFP/Getty
REUTERS/Yves Herman

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments