ஜெயவர்த்தனே ஒரு சோம்பேறி: காதல் சொட்ட சொட்ட பேசிய மனைவி கிறிஸ்டினியா

Report Print Tony Tony in ஏனைய விளையாட்டுக்கள்
ஜெயவர்த்தனே ஒரு சோம்பேறி: காதல் சொட்ட சொட்ட பேசிய மனைவி கிறிஸ்டினியா

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே 18 ஆண்டுகளாக அந்த அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்தவர்.

கொழும்பில் 1977ம் ஆண்டு மே 27ன் திகதி பிறந்த ஜெயவர்த்தனே, புற்றுநோயால் சிறிய வயதிலே தனது இளம் சகோதரை பறிகொடுத்தார். இது அவரை மனதளவில் அதிகமாக பாதித்தது.

இதில் இருந்து அவர் வெளியில் வர நீண்ட வருடம் ஆனது. பின்னர் அந்த துயரத்தில் இருந்து மீண்டு கிரிக்கெட் பயிற்சியை தொடர்ந்த ஜெயவர்த்தனே, 1997ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை அணிக்குள் நுழைந்தார்.

448 ஒருநாள் போட்டிகளில் 12,650 ஓட்டங்களையும், டெஸ்டில் 11,814 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்த அவர் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

ஜெயவர்த்தனேவின் கிரிக்கெட் வாழ்க்கையைப் போலவே, அவருடையை காதல் வாழ்க்கையும் சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது.

ஜெயவர்த்தனே விமானப் பணிப்பெண்ணான கிறிஸ்டினியா மல்லிகா சிறிசேனா என்பவரை காதலித்து 2005ம் ஆண்டு நவம்பர் 3ம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

மல்லிகா இலங்கை- டானிஷ் பெற்றோருக்கு பிறந்தவர். டென்மார்க்கில் பிறந்த அவர் விடுமுறைக்காக இலங்கை வந்த போது அப்படியே நிரந்தரமாக இலங்கையில் தங்கி விட்டார்.

உலகம் சுற்றும் வாலிபராக இருந்த தந்தை தனது தாயாரை டென்மார்க்கில் இருக்கும் போது காதலித்து மணந்து கொண்டதாக கிறிஸ்டினியா தெரிவித்துள்ளார்.

ஜெயவர்த்தனே உடனான பழைய நினைவுகள் பற்றி பேசிய கிறிஸ்டினியா, முதல் முதலில் எனது தந்தை, ஜெயவர்த்தனே காலியில் கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவரை தொலைக்காட்சியில் பார்த்தார்.

அப்போது அவர் எனது அம்மாவிடம் தொலைக்காட்சியில் தெரிகிறாரே அவரை தான் கிறிஸ்டினியாவை ஒருநாள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றார். அப்போது நான் இந்தியாவில் இருந்தேன்.

ஜெயவர்த்தனே நேர்மையானவர், நேர்த்தியானவர், மிகவும் தாராளமனவர், அதேசமயம் கொஞ்சம் சோம்பேறி. அவரை தாண்டி என்னால் எதையும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

எனது அம்மா மிகவும் அமைதியானவர். அதேபோல் ஜெயவர்த்தனேவும் அமைதியான மனிதர். கோபம் என்பது அவருக்கு எளிதில் வராது.

விளையாட்டை எடுத்துக் கொண்டால் கிரிக்கெட் தான் அவருக்கு முதல். அதற்கு பிறகு கோல்ஃப் அவருக்கு பிடித்த விளையாட்டு.

அவரது சகோதரர் இறப்பிற்கு பின்னரே அவர் புற்றுநோய் மருத்துவமனையை கட்டும் முயற்சியில் களமிறங்கினார்.

மேலும், கிரிக்கெட் வீரர்கள் விமான பணிப்பெண்களை திருமணம் செய்து கொள்வது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு புன்னகையுடன் பதிலளித்த கிறிஸ்டினியா, “நான் அப்போது பயிற்சியில் தான் இருந்தேன். விமான பணிப்பெண்ணாக இல்லை.

அதேபோல் ஜெயவர்த்தனேவை கிரிக்கெட் வீரராக இல்லாமல் ஒரு சிறந்த மனிதராக காதலித்தேன். நான் பறப்பதிலும், அவர் போட்டிகளிலும் பிஸியாக இருந்தோம்.

கிரிக்கெட் வீரராக அவரின் வாழ்க்கையை பற்றி நான் நன்கு அறிந்திருந்தேன். அவர் தான் எனது முதலும் இறுதியுமான காதல்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments