சர்வதேச பழங்குடிகள் தினத்தை, இன்று தங்கள் கலாச்சார முறைப்படி பழங்குடியின மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பன்னாட்டு உலகப் பழங்குடிகள் நாளானது, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதியன்று அனுஸ்டிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 1994 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.
இது, 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அந்த வருடத்திலிருந்து தொல்பழங்குடிகளின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அந்த உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் இது குறித்து மேலதிக தகவலை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.