2019ல் திருமணம் நடக்கணுமா? இங்க ஒருமுறை மட்டும் போயிட்டு வாங்க

Report Print Gokulan Gokulan in ஏனையவை

தற்போது இருக்கும் பெரிய பிரச்சனை உரிய வயதில் திருமண வரம் அமைவது இல்லை என்பதுதான்.

கணினியுகமான இந்த காலத்தில் தற்போது இதற்காக பல மீம்ஸ்களும் வலம் வருவது வழக்கமாகி கொண்டே செல்கின்றது.

படித்து முடித்ததும், வேலைக்கு செல்ல தாமதமாகும் பலருக்கு திருமணமும் அமைய முற்றிலும் தாமதமாகுவது வழக்கமாகி விட்டது.

அப்படி தவிக்கும் பலருக்கும் ஒரு வருடத்திற்குள் திருமணம் ஆக வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் திருவேள்விக்குடியில் அமைந்துள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று வரவேண்டும்.

இந்த கோவிலில் சிவன் - பார்வதி திருமணத்துக்கான வேள்வி வளர்த்து தொடர் யாகம் செய்தார்கள் என்று நம்பபடுவதால், திருவேள்விக்குடி என்று பெயர் பெற்றது.

இங்கு இருக்கும் இறைவனை மணவாளேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர் என்று அழைக்கின்றனர். இந்த கோவில் மைலாடுதுறை கும்பகோணம் சாலையில் 3கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இதுபோன்று மூன்று மாதங்களில் திருமணம் நடக்க கபிஸ்தலம் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வரவேண்டும்.

இந்த ஆலயம் தஞ்சை கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இதில் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் என்றும் இறைவி காமாட்சி அம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இந்த கோவிலில் பெண்கள் வேண்டுதல் செய்யும் போது வளையல் அணிந்து வேண்டுதல் செய்ய வேண்டும். மேலும் மற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கும் போது, வளையல் வழங்கினால் நிச்சையம் திருமண தடை நீங்கி மூன்று மாதத்தில் திருமணம் நடக்கும்.

மற்றொரு கோவிலான கும்பகோணம் நீடமங்கலம் சாலையில் அமைந்துள்ள சற்குண லிங்கேஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு மருதநல்லூர் கோவில் என்று மற்றொரு பெயரும் உண்டு.

இங்கு இறைவன் கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலின் இறைவி சர்வலங்கார நாயகி, அத்வைத நாயகி, கல்யாணி எனும் அழைக்கப்படுகிறார்.

இந்த மூன்று கோவிலிலும் நீங்கள் வேண்டுதல் நடத்தினால் நிச்சயம் அடுத்தது திருமணம் தான்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்