மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் நாய்கள்

Report Print Givitharan Givitharan in ஏனையவை

நீங்கள் எப்போதாவது நாய்களுடன் நெருக்கமாகப் பழகியதுண்டா?

அப்படி பழகியிருந்தால் அவற்றின் இன்ப, துன்பங்களை உங்களால் புரிந்துகொள்ளக்கூடும்.

நாய்கள் உண்மையில் என்னதான் அனுபவிக்கின்றன என்பதை நேரடியாக கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் நாய்களும் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்பதை விஞ்ஞானமும் உறுதிப்படுத்தியுள்ளது. .

நாய்கள் நீண்ட காலமாகவே மக்களால் வளர்க்கப்பட்டுவருகின்றன.

இவை மனிதனுக்கு அவனைப் பாதுகாகக்கவெனவும், அவனுக்கு சந்தோசத்தைக் கொடுக்கவெனவும் இயற்கையால் அளிக்கப்ட்ட கொடையாகவே பார்க்கப்படுகின்றது.

மற்றைய எல்லா விலங்குகளுக்கும் மத்தியில் நாய்களே மிக விசுவாசமானவை, இவை மனிதனுக்கு கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த நண்பன்.

இவ்வாறான இயல்புகளைக் கொண்ட நாய்களை வளர்க்கும் 975 இளையோரில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வில், அவர்கள் தங்களுக்கு கஷ்டமான தருணம் வரும்வேளைகளில் தமது தாய், தந்தை, நண்பர்கள், உறவினர்களை விட நாய்களையே துணைகக்கு அழைப்பது தெரியவந்திருக்கின்றது.

தற்போது இவை மனிதனை சிகிச்சையளிப்பதற்காக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது ஒரு ஆச்சரியமான விடயமாக இருக்கப்போவதில்லை.

இவை தற்போது பல்வேறு மனநிலை தொடர்பான சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்