உலகில் விடை தெரியாத மர்மம் நிறைந்த நாஸ்கா கோடுகள்!

Report Print Gokulan Gokulan in ஏனையவை

இந்த பூமி பந்தானது பல்வேறு அதிசயங்களையும், மர்மங்களையும் மனித அறிவுக்கு புலப்படாத பல ரகசியங்களையும் உள்ளடக்கியுள்ளது.

பலகோடி நட்சத்திர மண்டலங்களையும் கிரகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த மாபெறும் அண்டத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ்வதாக மனிதன் கண்டுக்கொண்டுள்ளான்.

இந்த விந்தையான உலகை ஆளும் வேட்கையில் செவ்வாய்கிரத்திற்கே மனிதனை அனுப்ப முயற்சிக்கும் மனிதனுக்கு இந்த பூமியில் உள்ள நாஸ்கா கோடுகளின் மர்மங்களை புரிந்து கொள்ளவும்; அதற்கான காரணங்களை கண்டறிய முடியாமலும் மனிதன் தவித்துக் கொண்டிடுக்கிறான்.

நாஸ்கா கோடுகள் தெற்கு அமேரிக்காவின் பசுபிக் கடலின் கரையில் உள்ள பெரு நாட்டின் ஒரு காய்ந்த சமவெளி பிரதேசத்தில், அதாவது பாலைவன பிரதேத்தில் 1500 வருடங்களுக்கு முன்பாக 900 வகையான வடிவங்களில் வரையப்பட்ட வடிவியல் உருவங்கள் ஆகும்.

பயன்படுத்தப்படாத அந்த நிலம் முழுவதுமே வித்தியாசமான கோடுகளாகவும், வளைவுகளாகும் காட்சி அளிக்கின்றன.

அந்த இடத்தில் பறவைகள், பூச்சிகள், மிருகங்கள், ஊர்வன மற்றும் கேந்திர கணித உருவங்களாகவே கண்ணுக்கு புலப்படும் இடம்வரையில் காட்சியளிக்கின்றன.

500 சதுர கி.மீட்டர்கள் பரப்பளவில் செதுக்கப்பட்டுள்ள இந்த நாஸ்கா, கலாச்சாரத்தை தாங்கி நிற்கக்கூடிய கோடுகள், commercial airlines சேவைகள் பெரு நாட்டின் நாஸ்கா சமவெளியின் மீது பறக்கத்தொடங்கிய 1920 ஆம் ஆண்டில் நாகரீக மனிதனோடு கண்களுக்கு முதன் முதலில் தெரிந்தது.

இந்த உலகில் இதுபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரைப்படங்கள் காணப்பட்டாலும், 300 க்கும் மேற்ப்பட்ட ஒரே இடத்தில் மிகப்பெரிய அளவில் வரைப்பட்டுள்ள காரணம்தான் நாஸ்கா மீதான மனிதன் தரும் முக்கியதுவத்துக்கு அடிப்படை காரணமாகும்.

இந்தக் கோடுகள் கி.பி 400 ல் இருந்து கி.பி 600 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே புலப்படும் அளவிற்கு சில வரைப்படங்கள் 1000 மீட்டர்களுக்கும் அதிகமான நீளத்திற்கு வரையப்பட்டிறுக்கிறது என்றால் அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத கிபி 400 ஆம் ஆண்டுகளில் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ள கோடுகளை நினைத்தால் உலகின் மர்மங்களில் ஒரு தனி இடம் கொடுக்க வேண்டிய கட்டாயமும் நாஸ்கா கோடுகளுக்கு உள்ளது.

நிபுணர்கள் இதனை உலகின் மிகப்பெரிய வானசாஸ்திர நாற்காட்டி என நம்புகிறார்கள். இந்த கோடுகளின் அளவையும், பானியையும் பார்க்கும் போது கணிதத்தில் பிரியமுள்ள ராட்சத மனிதர்கள் தான் வரைந்திருக்க முடியும் என்று சிலர் நம்புகிறார்கள்.

ஆனால் திருப்திகரமான பதில்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

கோடுகளில் என்ன மர்மம் என்று யோசிக்கிறுரிங்களா இரும்பு தாதுப்பொருள்கள் நிறைந்த நாஸ்கா பகுதியில் செந்நிற கூழாங்கற்கள் அதிகளவில் பரவிக் கிடக்கின்றன.

அந்த கூழாங்கற்களை எடுக்கும் போது அந்த இடம் வெளிர் நிறமாக மாறும். இந்த முறையை பயன்படுத்தி ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.

எந்த ஒரு தொழில்நுட்பமும், உயரத்தில் இருந்து பார்க்கக் கூடிய வசதிகள் இல்லாத காலத்தில் எப்படி வரையப்பட்டிருக்கும் என்பதுதான் வியப்பின் உச்சம்.

இந்த கோடுகள் நமக்கு கூறப்படும் கருத்து என்னவென்று அறிய மரியாரெய்ஸி என்பவர் தன் வாழ்நாளையே செலவழித்துள்ளார்.

இப்படி பலரும் தங்களுடைய கருத்துகளை முன்வைத்தாலும் உன்மை என்னவென்று யாராலும் அறியமுடியவில்லை. நாஸ்கா இன்றும் உலகின் மர்மமாகவே உள்ளது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்