பல் நோய் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in ஏனையவை

பல் அரிப்பானது இன்று உலகளவில் பல் வியாதிகளில் முக்கியமான ஒன்று.

இதற்கு வாயு ஏற்றப்பட்ட குடிவகைகள், பழச் சாறு, மது மற்றும் அமில உணவுகள், குடிவகைகள் காரணம் சுமத்தப்படுகின்றன.

ஆனாலும் ஆய்வாளர்கள் கூறுவது மனிதன் மில்லியன் வருடங்களாகவே பல் வியாதியால் அவதிப்பட்டுவருகின்றான் என்று.

இது பற்றி ஆய்வாளர் கூறுகையில், "நானும் எனது நண்பர்களும் தற்போதைய அரிப்பால் உண்டாவதைப் போன்ற பல் புண்களை 2.5 மில்லியன் வருடங்கள் பழமை வாய்ந்த முன் பல்லில் கண்டுபிடித்திருக்கின்றோம்".

இது வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்களும், அதற்கு முன்பு வாழ்ந்தவர்களும் இதே பல் வியாதியால் அவதிப்பட்டதற்கு சான்று பகர்கிறது.

பல் அரிப்பு பல் இழையங்களை பாதிப்பதால் அவை பளபளப்பான, ஆழம் குறைந்த புண்களை விட்டுச்செல்கின்றன.

நாம் கடுமையாக பல் துலக்கையில் பல் இழையங்கள் பாதிக்கப்படுகின்றது, இது பின்னர் அமிலத் தன்மையான உணவு மற்றும் குடிபானங்களை எடுத்துக்கொள்ளும் போது சொத்தையல்லாத துளைகளை ஏற்படுத்துகின்றது.

இத் துளைகளை படிமமாக்கப்ட்ட Australopithecus africanus இனத்தக்குரிய மனித மூதாதையரின் பற்களில் காண முடிந்திருக்கிறது.

புண்ணின் பருமன் மற்றும் உண்டாகிய இடம் என்பவற்றை வைத்து இவர் அநேகமாக பல்வலியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்