கிங் பென்குயின் குடித்தொகை 90 வீதத்தால் வீழ்ச்சி

Report Print Givitharan Givitharan in ஏனையவை

புவியில் கிங் பென்குயின்களின் எண்ணிக்கை கடந்த 30 வருடங்களில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பான ஆய்வுகள் Antarctic Science ஆகஸ்டு வெளியீட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் இதன் குடித்தொகையை 1980 ஆம் ஆண்டு தொடங்கி மதிப்பீடு செய்து வருகின்றனர்.

இக்குழு இந்திய பெருங்கடலின் தென் பகுதியில இதன் குடித்தொகை 88 வீதத்தால் குறைவடைந்துள்ளதை இனங்கண்டுள்ளனர்.

இப் பென்குயின்கள் 30 பவுண்டு நிறையுடையவை, 3 அடிகள் உயரமுடையவை. இவை இரைக்காக 250 மைல்கள் வரை பிரயாணம்செய்யக் கூடியவை.

இரை தேடுவதைத் தவிர அன்றி இவை தாம் இடம்பெயர்வதில்லை. இவை ஒரே இடத்திலேயே பல காலம் வசிக்கக்கூடியன.

இதன் பெரும் குடித்தொகை பன்றித் தீவிலே அதிகம் காணப்படுகின்றது. ஆய்வாளர்கள் குழு முன்னர் 500 000 சோடிகளாக கருதப்பட்ட இதன் குடித்தொகை தற்போது 60 000 சோடிகளாகவே உள்ளதென மதிப்பிட்டுள்ளனர்.

அம் மதிப்பீடு வானியல் புகைப்படங்கள் மூலமாகவும், செய்மதிப் புகைப்படங்கள் மூலமாகவும் மதிப்பிட்பட்டது.

அதன் குடித்தொகை வீழ்ச்சிக்கான சரியான காரணம் இதுவரையிலும் இகங்காணப்படவில்லை.

எனினும் காலநிலை மாற்றம் இதில் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்