புகைப்படத்தில் இளம் பெண்ணுடன் இருந்த கணவனை அவசரப்பட்டு கத்தியால் குத்திய மனைவி! பின்னர் காத்திருந்த அதிர்ச்சியூட்டும் உண்மை

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
0Shares

மெக்ஸிகோவில் புகைப்படத்தில் இருப்பது யாரென்று தெரியாமல், கணவன் வேறொரு இளம் பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக நினைத்த மனைவி சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோ நாட்டில் செனோரா மாநிலத்தில் வசிக்கும் தம்பதி Juan N மற்றும் Leonora N.

கடந்த ஜனவரி 22-ஆம் திகதி இவர்களது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. பதறிப்போன அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கையில், மனைவி Leonoraவின் கையில் இரத்தத்துடன் பெரிய சமயலறைக் கத்தி இருந்தது.

அருகில், அவரது கணவன் Juan பலமுறை கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த பொலிஸார் Juanஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் Leonoraவை கைது செய்தனர்.

நடந்தது என்னவென்று பொலிஸார் விசாரிக்கையில் அதிர்ச்சியூட்டும் சோக சம்பவம் தெரியவந்தது.

Leonora தனது கணவரின் மொபைல் போனை எடுத்த பார்த்தபோது, சில புகைப்படங்களை அதில் புதிதாக இருந்துள்ளன. அவற்றில் தனது கணவன் ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை அவர் பார்த்துள்ளார்.

இதனால், கடும்கோபத்துக்கு ஆளான Leonora, ஆத்திரத்தில் ஒரு கத்தியை எடுத்து Juanஐ தொடர்ந்து குத்தியுள்ளார். ஒன்றும் புரியாமல் செய்வதறியாது பல குத்துக்களை வாங்கிய பின்னர் ஒரு வழியாக மனைவியின் கையில் இருந்த கத்தியை பிடுங்கியுள்ளார்.

பின்னர், Juan உண்மையை சொன்னதும் Leonoraக்கு தூக்கிவாரிப்போட்டது.

அந்த புகைப்படத்தில் இருந்தது யாரோ ஒரு இளம் பெண் அல்ல, அது அவர் தான் என தெரியவந்தது.

Juan மற்றும் Leonora இருவரும் தங்கள் இளமை பருவத்தில், இருவரும் சற்று ஒல்லியாக இருந்த காலக்கட்டத்தில் டேட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் அவை.

பழைய அட்டைப் படங்களாக இருந்த போட்டோக்களை எடுத்து, டிஜிட்டலாக மாற்றி தனது மனைவிக்கு காட்டுவதற்காக Juan தனது போனில் வைத்திருக்கிறார்.

ஆனால், அதனை யாரோ என்று நினைத்த மனைவி, தனது கணவன் தன்னை விட்டு வேறு ஒருவரின் தொடர்பில் இருப்பதாக தவறாக நினைத்து ஆத்திரத்தில் கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்