நிச்சயம் இதற்காக டிரம்ப்பை பழி வாங்கியே தீருவோம்! விடமாட்டோம்...கடும் கோபத்தில் இருக்கும் ஈரான்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
202Shares

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற நிலையில், டிரம்ப்பை பழிவாங்கிய தீருவோம் என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ஆம் திகதி ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்ட இராணுவ வீரர்களை அமெரிக்காவின் ஆள் இல்லா ராணுவ விமானம் மூலம் குண்டுவீசித் தாக்கியது.

இதில் சுலைமானி உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தங்கள் நாட்டின் புரட்சிப் படை தளபதி கொல்லப்பட்டதற்கு, பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அறிவித்தது. அதுமட்டுமின்றி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தீவிரவாதியாக அறிவித்தது.

மேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தில் ஈரான் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட ராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் ராணுவம் கண்டறிந்துள்ளது.

இதையடுத்து தற்போது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ள நிலையில், அயத்துல்லா அலி காமெனி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சுலைமானியின் மரணத்துக்குப் பழிவாங்குவது தவிர்க்க முடியாதது. சுலைமானியின் மரணத்துக்கு உத்தரவிட்ட மனிதரும் (டிரம்ப்) பழிவாங்கலை எதிர்கொள்ள வேண்டும். பழிவாங்கல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்