பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையை கால்வாயில் வீசிய தாய்: கண்ணை மறைத்த காதல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
331Shares

தான் பெற்ற குழந்தையை, பிறந்து மூன்று நாட்களே ஆன நிலையில் கால்வாயில் வீசியுள்ளார் ஒரு இளம்பெண்.

குவாதிமாலா நாட்டைச் சேர்ந்த Alexia López (18) என்ற பெண்ணுக்கு சென்ற வாரம் புதன்கிழமை, ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

சனிக்கிழமை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட Alexia, தன் காதலன் Jose Clemente (28)உடன் நேராக கால்வாய் ஒன்றிற்கு சென்று தன் குழந்தையை கால்வாயில் வீசிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

பின்னர், செவ்வாய்க்கிழமை தான் செய்ததை தன் தாயிடம் கூறியுள்ளார் Alexia. பேரப்பிள்ளையை பார்க்கும் ஆவலிலிருந்த அந்த பெண், பதறிப்போய் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

குழந்தை கால்வாயில் வீசப்பட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டதால், அவர்களால் குழந்தையின் உயிரற்ற உடலைத்தான் மீட்க முடிந்தது.

கோபமடைந்துள்ள Alexiaவின் தாய், தன் மகளையும் அவளது காதலனையும் கடுமையாக தண்டிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Alexia, Clementeஐ கடந்த நான்கு மாதங்களாகத்தான் காதலித்துவருகிறார், அதாவது அவர் வயிற்றிலிருந்த குழந்தை Clementeஉடையது அல்ல.

இந்த விடயம் Clemente குடும்பத்தாருக்கு தெரியவந்தால், Clementeஐ திருமணம் செய்ய அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்பதால்தான் அந்த குழந்தையை கொல்ல முடிவு செய்துள்ளார் Alexia.

இப்போது குழந்தையும் இல்லாமல், காதலனும் இல்லாமல் சிறைக்குச் செல்கிறார் Alexia.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்