வெளிநாட்டில் எம்.பி-யாக தெரிவு செய்யப்பட்ட இந்தியர்! பதவியேற்பின் போது என்ன மொழியில் பதவியேற்றார் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
4338Shares

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர், நாடாளுமன்றத்தில் பதவியேற்பின் போது சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி ஏற்றார்.

இந்தியாவில் ஹிமாச்சால பிரதேசம், ஹமீா்பூரை பூா்விகமாக கொண்டவர் சர்மா(33). மருத்துவரான இவர் அங்கிருக்கும் தொழிலாளர் கட்சி சார்பில், நியூசிலாந்தின் ஹாமில்டன் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு

எம்.பி.யாக சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த புதன் கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பதவியேற்பின் போது, சர்மா, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், முதலில் நியூசிலாந்தின் தனித்துவமான மெளரி மொழியிலும் பின்னா் சம்ஸ்கிருத மொழியிலும் உறுதிமொழி ஏற்றார்.

பதவி ஏற்பின் போது, ஏன் ஹிந்தி மொழியில் உறுதி மொழி எடுக்கவில்லை என்று சர்மாவிடம் கேட்ட போது, அவர்

ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்துவது என்பது கடினமான விஷயம். அதன் காரணமாகத்தான் சம்ஸ்கிருதத்தை தெரிவு செய்தேன். சம்ஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியது என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்தில் 2017-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற சா்மா, இந்த ஆண்டு தேசிய கட்சி வேட்பாளா் டிம் மெகின்டோவை தோற்கடித்து எம்.பி. ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்