மனைவியின் பிரசவத்துக்காக மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்ற தந்தை: திரும்பி வந்தபோது கண்ட அதிரவைக்கும் காட்சி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில், தன் மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக, மகனை நண்பர் வீட்டில் விட்டுச் சென்ற ஒருவர் வீடு திரும்பியபோது, அவருக்கு ஒர் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

Mikhail Grushin (33) என்பவர் தன் மனைவியான Elenaவை (36) பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அவர் தனது மகனை தனது நண்பரான Sergey Podgornov (47) என்பவர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

அவர் வீடு திரும்பியபோது கண்ட காட்சி அவரை நடுங்க வைத்துவிட்டது. வீட்டின் சமையலறையில் அவரது மகனுடைய தலையில்லாத உடல் மட்டும் கிடந்தது. Podgornov, அந்த சிறுவனின் தலையை வெட்டிக் கொன்றுள்ளார்.

கடுமையான போதைப்பொருள் மற்றும் மதுபானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தனக்கு என்ன நடந்தது என்றே நினைவில்லை என்று கூறியுள்ளார் அவர்.

சிகரெட் பிடிப்பதற்காக வெளியே சென்றேன், திரும்பி வந்து மீண்டும் ஒரு கப் மதுபானம் குடித்தேன், அப்போதுதான் நான் செய்த விடயம் எனக்கு தெரியவந்தது. வெளியே சென்று பொலிசாருக்காக காத்திருந்தேன் என்று கூறியுள்ளார் Podgornov.

இறந்த அந்த சிறுவன் Elenaவின் ஐந்தாவது மகன், ஆறாவது பிரசவத்துக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போதுதான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. Podgornovக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.

You May Like This Video

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்