பட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய்! காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
525Shares

கொலாம்பியாவில் முன்னாள் காதலனால் பெண் ஒருவர் குழந்தைகள் கண்முன்னே சுட்டு கொல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.

கொலாம்பியாவின் Cali நகரிலே இந்த பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. அதில், Maria Cristina Calle என்று அறியப்படும் பெண், தன் இரண்டு குழந்தைகளுடன் சென்று கொண்டிருக்கிறார்.

அப்போது திடீரென்று நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வரை, இதைக் கண்ட குழந்தைகளில் ஒருவர் அலறி அடித்து ஓட, உடனே அந்த ஆண் Maria Cristina Calle-வை நான்கு முறை துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்து தப்பி ஓடுகிறார்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் Maria Cristina Calle-வின் உடலை பார்த்த போது, அவர் இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட Maria Cristina Calle-வின் தொண்டையில் துப்பாக்கியால் சுடப்பட்டதால், அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அந்த பெண்ணின் முன்னாள் காதலன் என்று அறியப்படும், அந்த நபர் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்.

இந்த ஆண்டு இதுவரை குறித்த நகரத்தில் 70 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நகரம் துக்கமாக உள்ளது, ஏனெனில் மற்றொரு பெண் ஒரு பொது இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்போது, ​​வீடுகளும் பொது இடங்களும் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை. நாங்கள் மிகவும் பாதுகாப்பற்றதாக உணர்வதாக அங்கிருக்கும் சிலர் கூறியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது, இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கடந்த செப்டம்பர் மாதம் கொலம்பியாவில் நாள் ஒன்றிற்கு சராசரியாக மூன்று பெண்கள் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்