சீனா விமான நிலையத்தில் கூச்சல் குழப்பம்: ஆயிரக்கணக்கான பயணிகள் தடுத்து வைக்கப்பட்டதால் பரபரப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
183Shares

சீனாவின் ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒட்டு மொத்த பயணிகளும் பரிசோதனையில் உட்படுத்தப்பட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை அடுத்து கொரோனா பாதுகாப்பு உடை அணிந்த ஊழியர்கள் உடனடியாக பணியமர்த்தப்பட்டு, பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் தரைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகள் காணொளியாக வெளியாகியுள்ளது.

மேலும், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்பதால், பயணிகள் கூட்டம் தங்களை விடுவிக்குமாறு முழக்கமிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, விமான நிலையத்தில் இருந்து தப்பிக்க முயன்ற பயணிகள் பலரையும் விமான நிலைய ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனிடையே உள்ளூர் பத்திரிகைகள் சில, குறித்த சம்பவத்திற்கு பிறகு, ஊழியர்களை மட்டுமே கொரோனா சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளன.

ஆனால், சீனாவில் அமுலில் இருக்கும் புதிய சட்டத்தின்படி, விமான பயணிகளும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாங்காய் பகுதியில் நீண்ட 11 நாட்களுக்கு பின்னர் 39 வயதான நபரும் அவரது 34 வயது மனைவியும் கொரோனா சோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில்,

அவர்கள் தொடர்பில் சுகாதார ஊழியர்கள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்