இந்தியாவின் ஆவேச பதிலடி...ஏவுகணைகளை பார்த்து ஓட்டம் பிடித்த பாகிஸ்தான் இராணுவம்: வெளியான வீடியோ காட்சிகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
2153Shares

ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் இராணுவ வீரர் ஒருவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தலைதெறிக்க வேகமாக ஓடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் இடையே ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று காலை முதல் கடும் மோதல் நடைபெற்று வருகிறது.

காலை முதல் காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறி வந்த பாகிஸ்தான் இராணுவ படை, சில மணி நேரங்களுக்கு முன் உரி பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியது.

அதோடு இன்னொரு பக்கம் குரேஸ் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. உரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

அதேபோல் 3 இந்திய பொதுமக்கள் பலியாகி உள்ளனர். அதுமட்டுமின்றி 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்திய இராணுவம் அங்கு உடனே பதிலடி தாக்குதலை நடத்தியது . ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, குப்வாரா மற்றும் பந்திப்போரா மாவட்டங்களில் இருந்து, பாகிஸ்தான் பதுங்கு குழிகளை குறி வைத்து இந்திய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் தாக்கின.

இதில், பாகிஸ்தானிய வெடிமருந்துகள், எரிபொருள் சேமிப்பு கட்டிடங்கள் மற்றும் பங்கரவாதிகளுக்கான ஏவுதளங்களும் குறி வைத்து தாக்கப்பட்டன. இது தொடர்பான வீடியோக்களை இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது.

மற்றொரு வீடியோவில், இந்திய இராணுவத்தால் சுடப்பட்ட ஒரு பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை பதுங்கு குழியை நோக்கி பறக்கும்போது ஒரு பாகிஸ்தான் இராணுவ வீரர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள, தலைதெறிக்க வேகமாக ஓடுவதை பார்க்க முடிகிறது.

இந்தியாவின் பதிலடி தாக்குதலில் 7-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆவேச பதிலடியில், சுமார் 7க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்