அந்தரத்தில் கழன்று விழுந்த இன்ஜின் பாகங்கள்! அவசரமாக தரையிறங்கி விபத்துக்குள்ளான விமானம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
649Shares

ரஷ்யாவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட கோளாறால் அவசரமாக தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

An-124 சரக்கு விமானம் ரஷ்யாவின் Novosibirsk Tolmachevo சர்வதேச விமானநிலையத்திலிருந்து வியன்னாவுக்கு புறப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்திலே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, Novosibirsk Tolmachevo சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம் ஓடுபாதையிலிருந்து விலக ஓடி விபத்துக்குள்ளானது.

இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்துள்ள விசாரணை குழு விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதேசமயம் விமானம் புறப்படும் போது அதிலிருந்து கழன்ற இன்ஜின் பாகம் கீழே இருந்த கிடங்கு ஒன்றின் கூரை மேல் விழுந்துள்ளது. இதில் கிடங்கின் கூரை சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்