சூட்கேஸில் வெட்டி நொறுக்கப்பட்ட சடலம்: சுமந்து சென்ற இரு சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
452Shares

மெக்சிகோ நாட்டில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸில் வெட்டி நொறுக்கப்பட்ட சிறுவனின் சடலம் ஒன்றை மீட்டுள்ள பொலிசார், இந்த விவகாரம் தொடர்பில் இரு சிறார்களை கைது செய்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள C5 சாலையில், புதனன்று இரு சிறுவர்கள் சூட்கேஸ் ஒன்றுடன் தடுமாறுவதை அதிகாரிகள் குழு ஒன்று கண்டனர்.

இதனிடையே அந்த சூட்கேஸை சிறுவர்கள் இருவரும் பாழடைந்த குடியிருப்பு ஒன்றின் முன்பு வைத்துவிட்டு அங்கிருந்து மாயாமாகினர்.

இச்சம்பவத்தில் சந்தேகமடைந்த அந்த அதிகாரிகள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், அந்த சூட்கேஸை கைப்பற்றியதுடன், உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் 15 வயதேயான ஜோஸ் ரோட்ரிகோ மற்றும் டார்வின் அஸேல் ஆகிய சிறுவர்கள் இருவரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்டது அலெஸாண்ட்ரோ என்ற 14 வயது சிறுவன் எனம்,

மெக்ஸிகோ நகரில் செவ்வாய்க்கிழமை மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதமேந்தியவர்கள் சிறுவன் அலெவுஸாண்ட்ரோவை கடத்தி டாக்ஸியில் ஏற்றிச் சென்றனர் எனவும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சிறுவனை கடத்தியவர்கள் பெற்றோரை தொடர்பு கொண்டு 39,000 டொலர் தொகையை கோரியதாக தெரிய வந்தது.

ஆனால், இரு தரப்பினருக்கும் இடையே இறுதி முடிவை எட்டுவதில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து, சிறுவனை கடத்திய கும்பல் தொலைபேசி அழைப்பை ஏற்க மறுத்துள்ளனர்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் கைதான சிறுவர்கள் இருவரும், விசாரணை அதிகாரிகளிடம்,

உள்ளூர் சந்தையின் பயன்பாட்டில் இல்லாத தளத்தில் சூட்கேஸைக் கைவிட அவர்களுக்கு 97 டொலர் கூலியாக வழங்கப்பட்டதாக ஒப்புக்கொண்டனர்.

இருப்பினும், உண்மையான குற்றவாளிகளை இதுவரை பொலிசாரால் அடையாளம் காணப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்