அமெரிக்காவின் துணை அதிபராகவுள்ள கமலாஹாரிஷ் பற்றி வைரலாகும் புகைப்படம்: எழும் கடும் விமர்சனங்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
2650Shares

அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் கமலா ஹாரிஸ் தன்னுடைய வெற்றிக்குப் பின்னர், குறிப்பிட்ட இறைச்சி ஒன்றை சாப்பிட்டதாக சமூகவலைத்தளங்களில் அவர் தொடர்பான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மீது சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தேர்தலின் வெற்றிக்கு பின்னர் கமால் ஹாரிஷ் மாட்டிறைச்சி கரி ஒன்றை சாப்பிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஜோ பைடன் தான் பொறுப்பு ஏற்றக்கொண்டதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இந்த நடவடிக்கைக்காக 13 பேர் கொண்ட ஆலோசனை குழு ஒன்றையும் அவர் ஏற்படுத்தி இருக்கிறார். அப்படி ஜோ பைடன் ஏற்படுத்தி இருக்கும் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழுவில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் ஒருவர் விவேக் மூர்த்தி.

இன்னொரு நபர் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெயர் டாக்டர் செலின் ராணி கவுண்டர். பெரும்பாலும் இவரது பெயரை செலின் கவுண்டர் என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் கவுண்டர் எனும் பெயர் ஜாதியை குறிப்பதாக உள்ளது. எனவே அதை மாற்றிக் கொள்ளுங்கள் என அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து அவர் என்னால் மாற்றிக்கொள்ள முடியாது எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செலின் கவுண்டர் வெளியிட்ட அறிக்கையில், நான் பிறப்பதற்கும் முன்னரே 1970 களின் தொடக்கத்தில் என்னுடைய தந்தை தன்னுடைய பெயரை கவுண்டர் என மாற்றிக் கொண்டார். என்னுடைய பெயர்தான் என் பெயர்.

இது என்னுடைய வரலாற்றின் அடையாளத்தின் ஒரு பகுதி. அந்த வரலாற்றில் வலி இருந்தாலும்கூட, நான் திருமணம் செய்துகொண்டே போதும் என்னுடைய பெயரை நான் மாற்றிக் கொள்ளவில்லை. இப்போதும் அதை மாற்றிக் கொள்ள போவதில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

இப்படி துணை அதிபர் கமலா ஹாரிஷ் மற்றும் பைடன் உருவாக்கியுள்ள கொரோன ஆலோசனை குழுவில் இருக்கும் பெண் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதால், ஆட்சி துவங்குவதற்கு முன்னரே ஜோ பைடனுக்கு தலைவலி ஆரம்பித்துவிட்டதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்