சவுதி அரேபியாவில் புதிய தடை அமல்..! மீறுபவர்களுக்கு 2,66,600 டொலர் அபராதம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவில் சுகாதார விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படாவிட்டால், 20-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் Collective Housing வசிக்கக்கூடாது என அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதிகாரிகள் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

தொழிலாளர் குழுக்கள் பிறப்பிக்கும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் 20 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் நகர்ப்புறங்களில் அல்லது அதற்கு வெளியே ஒரே தளத்தின் கீழ் வாழ முடியாது என்று சவுதி அரேபியாவின் கட்டுப்பாட்டு மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த வீடுகளை கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் நகராட்சி மற்றும் ஊரக அமைச்சகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து மீறல்களும் அமைச்சருக்கு அல்லது பிரதிநிதிக்கு தெரிவிக்கப்பட வேண்டும், அவர்கள் அதில் வீட்டை நிரந்தரமாக மூடுவது உட்பட பொருத்தமான அபராதங்களை அமல்படுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகளை மீறும் எவரும் 30 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம் அல்லது ஒவ்வொரு மீறலுக்கும் அல்லது இரண்டிற்கும் சுமார் 2,66,600 டொலர் அபராதம் விதிக்கப்படலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

மேலும், தொடர்ச்சியான குற்றங்களுக்கு, அபராதங்கள் அதிகரிக்கப்படும், மேலும் 180 நாட்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 2,66,600 டொலர் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்