176 உயிர்களை பலிவாங்கிய உக்ரைன் விமான சுட்டு வீழ்த்தப்பட்டது இவரால் தான்! முக்கிய தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரானிய வான் பாதுகாப்பு பிரிவு அதன் ரேடார் அமைப்பை சரிசெய்ய மறந்ததே ஜனவரி மாதம் உக்ரேனிய பயணிகள் விமான் சுட்டு வீழத்தப்பட்டதற்கு வழிவகுத்தது என ஈரானின் உள்ளூர் விமான போக்குவரத்து அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உக்ரைன் விமானத்தை தவறாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதில் விமானத்தில் பயணித்த 176 கொல்லப்பட்டனர்.

விமான கருப்பு பெட்டிகளில் இருக்கும் ரகசிய தகவல்கள் கண்டறியும் பணி ஜூலை 20 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் விமான பாதுகாப்பு பிரிவு, உக்ரைன் விமானத்தை ஏவுகணை என்று தவறாக நினைத்து 30 விநாடிகள் இடைவெளியில் இரண்டு ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தியது.

ஈரானின் உள்ளூர் விமான போக்குவரத்து அமைப்பு (CAO) இணையதளத்தில் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, புதிய திசைக்கு மாற்றப்பட்ட பின் ரேடார் அமைப்பில் வடக்கு திசையை மீண்டும் சரிசெய்ய ஆபரேட்டர் மறந்துவிட்டார், இது ரேடரின் தரவை தவறாகப் படிக்க வழிவகுத்தது.

கட்டுப்பாட்டு அறையிலிருந்து எவ்வித பதிலும் இல்லாததால் உக்ரைன் விமானத்தை எதிரிகளின் ஏவுகணை என நினைத்த ஈரான் வான் பாதுகாப்பு அமைப்பின் ஆபரேட்டர் விமானத்தை நோக்கி ஏவுகணையை ஏவியுள்ளார் என்று CAO அறிக்கையில் கூறியது.

பெயரிடப்படாத ஆபரேட்டர் ஒருவர் சுயாதீனமாகவும் மேலதிகாரிகளின் அங்கீகாரமின்றி இந்த நடவடிக்கை எடுத்தார் என்று CAO அறிக்கையில் கூறியது.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விவரங்களை தெரிவிக்காமல் ஜூன் மாதம் தெரிவித்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்