பிணைக் கைதிகளை எரித்துக் கொன்ற கொடூரம்: தேவாலயத்தில் துப்பாக்கிதாரிகள் வெறியாட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் தேவாலயத்தில் புகுந்து துப்பாக்கிதாரிகள் முன்னெடுத்த படுகொலையில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் டசின் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜுர்பெகோமில் உள்ள சர்வதேச பெந்தெகொஸ்தே தேவாலயத்தில் இந்த இரத்தக்களரி நடந்துள்ளது.

இதனையடுத்து சிறப்பு பொலிசாரும், ஆயுதம் ஏந்திய தேசிய பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

200 பேர் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் குறித்த தேவாலயத்திற்கு அதிகாரிகள் தரப்பு விரைந்துள்ளது.

தொடர்புடைய தேவாலயத்தில் நடந்த தலைமைப் போரின் மத்தியில் இந்த கொலைகள் நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு, கார் ஒன்றில் எரிந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளனர். பாதுகாவலர் ஒருவரும் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியவர்களா அல்லது பிணைக் கைதிகளில் இருந்தார்களா என்பது தொடர்பில் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இதனிடையே பிணைக் கைதிகளாகவும், தேவாலயத்தில் வசித்து வந்ததாகவும் கூறப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 200 பேர் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

3 மில்லியன் உறுப்பினர்களை கொண்ட இந்த சர்வதேச பெந்தெகொஸ்தே தேவாலயத்தில் புதிய தலைவரை தெரிவு செய்வதில் கடும் குழப்பம் நீடித்து வருகிறது.

இதன் தலைவர் Glayon Modise புதிய தலைவரை அறிவிக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மரணமடைந்த நிலையில் தற்போது விசுவாசிகளை பிணைக் கைதிகளாக பிடித்து மிரட்டும் அளவுக்கு தலைவருக்கான போட்டி வலுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்