உயிரிழந்த எஜமானருக்காக 4 நாட்களாக ஒரே இடத்தில் காத்திருக்கும் நாய்! இதயத்தை உடைக்கும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் தன்னை வளர்த்த எஜமானர் உயிரிழந்தது தெரியாமல், அவருக்கு அவர் வளர்த்து வந்த நாய் நான்கு தினங்களாக பாலம் ஒன்றில் காத்திருந்த வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போர் நெஞ்சையும் கரைய வைக்கிறது.

சீனாவின் வுஹான் மாகாணத்தின் Yangtze பாலத்தில் இருக்கும் நதியில், நபர் ஒருவர் கடந்த 30-ஆம் திகதி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆற்றில் குதிக்கும் அவர் தன்னுடைய செல்லப்பிராணியான நாயை உடன் அழைத்து சென்றுள்ளார். இதனால் அந்த விசுவாசமான நாய் இப்போது அவரின் வருகைக்காக கடந்த நான்கு தினங்களாக அந்த பாலத்தின் நடைபாதையில் தனியாக காத்து கொண்டிருந்துள்ளது.

இதை அந்த வழியே சென்ற சூ என்று அறியப்படும் நபர் புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் அந்த நபர் குறித்த நாயை தத்தெடுக்க விரும்பியுள்ளார். ஆனால் அந்த நாய் அவரிடம் சிக்காமல் ஓடியுள்ளது.

மீண்டும் அந்த பாலத்தில் வந்து நின்றுள்ளது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோவைப் பார்த்த வுஹான் சிறு விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இயக்குனர் டு பேன், சூவின் பதிவைப் பார்த்து உள்ளூர் தன்னார்வலர்களுடன் விலங்கைத் தேடத் துவங்கினார்.

அன்று, சரியாக என்ன நடந்தது என்பதை சரிபார்க்க பாலம் அதிகாரிகளிடம் கேட்டோம். ஆனால், அன்றைய தினம் இது மிகவும் இருட்டாக இருந்ததால், கண்காணிப்பு கமெராவில் சரியாக பதிவாகவில்லை, ஆனால் அவர் குதிப்பதை பார்க்க முடிந்தது. அத்தகைய விசுவாசமான நாய் தெருக்களில் வழிதவறி வருவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அதற்கான ஒரு புதிய உரிமையாளரைக் விரைவில் கண்டுபிடிப்போம் என்று நாங்கள் இன்னும் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்