மூன்று முறை எச்சரிக்கையை நிராகரித்த விமானி: பாகிஸ்தான் விமான விபத்தில் திடுக்கிடும் தகவல்!

Report Print Abisha in ஏனைய நாடுகள்
1188Shares

பாகிஸ்தான் விமான விபத்தில், விமானிக்கு மூன்று முறை எச்சரிக்கை விடுத்தும் அவர் நிராகரித்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

PK-8303 விமானம் 99 பயணிகளுடன் லாகூரில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருக்கையில் விழுந்து நொறுக்கியது. அதில், பயணித்த 97 பயணிகளும் சம்ப இடத்திலேயே உயிரிழந்தனர்.

அது குறித்த விசாரணையில், தரைமட்டத்தில் இருந்து 7,000 அடி உயரத்தில் இருக்க வேண்டிய இடத்தில் விமானம் 10,000 அடிக்கு மேல் இருந்ததால் முதலில் விமானியை எச்சரித்துள்ளனர்.

அதன்பின் 10 மைல் கடல் மட்டத்திற்கு அருகில் இருக்கையில் 3000 அடி மட்டுமே உயரத்தில் இருக்க வேண்டிய இடத்தில் 7,000 அடிக்கு மேல் விமானம் இருந்ததாகவும், அப்போது விமானியிடம் எச்சரித்தாகவும் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இது போன்று மூன்று முறை நடந்துள்ளது.

தொடர்ந்து விமானம் மூன்று முறை தடுமாறியுள்ளது. இந்நிலையில், விமானம் தரையிறங்குவதற்கு முன் விழுந்து நொறுங்கியுள்ளது.

இது குறித்து இன்னும் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் விமானியின் தவறா அல்லது விமான தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்