‘கொலையாளி’..‘குப்பை’ என பொதுவெளியில் ஜனாதிபதியை துஷ்பிரயோகம் செய்த மக்கள்: வெளியான வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்
346Shares

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தலைநகர் பிரேசிலியாவில் உணவு உண்ண வெளியே சென்ற போது பொது மக்கள் சிலரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.

வீடியோவில், ஜனாதிபதி ஜெய்ர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சிலர் பின்னணியில் ‘கொலையாளி’ மற்றும் ‘குப்பை’ என்று கத்துக்கின்றனர்.

ஜனாதிபதி பாதுகாப்புக் குழுவால் சூழப்பட்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் கூட்டத்தைத் நோக்கி விரலை அசைக்கிறார்.

வார இறுதியில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இரண்டாவது வழக்குகளைக் கொண்ட நாடாக பிரேசில் உருவெடுத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, பிரேசில் கொரோனா வைரஸின் 15,813 புதிய வழக்குகளைப் பதிவுசெய்தது. அதன் மொத்தம் கொரோனா வழக்கு எண்ணிக்கை கிட்டதட்ட 3,62,000 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, நாட்டில் குறைந்தது 22,000 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை போல்சனாரோ அடிக்கடி புறக்கணித்தார், இது ஒரு கற்பனை அல்லது சிறிய காய்ச்சல் என்று அழைத்தார்.

பணி நிறுத்தம் மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளால் பொருளாதார தாக்கங்கள் நாட்டிற்கு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்