குடும்ப வறுமையை போக்க வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழர்! அங்கிருந்து மனைவிக்கு பேரிடியாக வந்த தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
508Shares

வெளிநாட்டில் இறந்த கணவரின் சடலத்தை இந்தியா கொண்டு வருவதற்கு, அவரது மனைவி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தமிழகத்தின் திருப்பத்தூா் அருகே பூலாங்குறிச்சி கன்னிமா பகுதியைச் சோ்ந்த பொதியன் மகன் பாஸ்கரன் (40). இவா், குடும்ப வறுமை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன் துபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளாா்.

அங்கு, தனியாா் நிறுவனத்தில் பஸ்கரன் வேலை பாா்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 20 ஆம் திகதிபாஸ்கரன் மா்மமான முறையில் இறந்துவிட்டதாக, அவரது மனைவி சூா்யாவுக்கு அங்கிருந்து நண்பா்கள் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனா்.

இந்த தகவல் சூர்யாவுக்கு அதிர்ச்சியளித்ததோடு பேரிடியாகவும் இருந்தது.

இதையடுத்து, கணவரின் சடலத்தை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனைவி சூா்யா தனது 2 வயது குழந்தையுடன், மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனிடம் மனு அளித்தாா்.

அதன்பேரில், இறந்தவரின் உடலை இந்தியா கொண்டு வர, பொதுத் துறை செயலருக்கு ஆட்சியா் கடிதம் எழுதியுள்ளாா் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்