கொரோனா குணமாகும் என மெத்தனாலை கலந்து குடித்த சுமார் 300 பேர் மரணம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஈரானில் கொரோனா குணமாகும் என பரவிய வதந்தியால் மெத்தனாலை கலந்து குடித்த சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் ஈரானில் இதுவரை 35,408 நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருப்பதோடு, 2,517 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக அங்கு இரண்டு மிகப்பெரிய அகழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இதனால் பயத்தில் உறைந்திருக்கும் ஈரான் மக்கள், ஆல்ஹகாலில் மெத்தனால் கலந்துகுடித்தால் வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்து விடலாம் என சமூகவலைத்தளங்களில் வெளியான போலி செய்திகளை நம்பி குடித்துள்ளனர்.

இந்த நிலையில் ஈரானில் மெத்தனால் கலந்து உட்கொண்ட 1000 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதுடன், 300 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக 480 பேர் இறந்திருக்கலாம் என்றும் 2850 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்றும் மற்றொரு அறிக்கை கூறியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்