ஊரடங்கு உத்தரவை மீறிய மக்கள் மீது பாய்ந்த ரப்பர் புல்லட்டுகள்! அதிர்ச்சியில் விழுந்தடித்து ஓடிய கூட்டம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூடியதால், பொலிசார் ரப்பர் தோட்டாக்களால் துப்பாக்கி சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. அதில் தென் ஆப்பிரிக்காவும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ஜொஹான்னஸ்பரில் ஷாப்ரைட் என்ற பிரபல மளிகைக் கடை முன்பாக 200 முதல் 300 பேர் குவிந்தனர். இது ஜொஹான்னஸ்பர்கில் உள்ள குற்ற நடவடிக்கை அதிகம் உள்ள இயோவில்லில் உள்ளது.

இது வர்த்தக நகரமும் கூட, தென் ஆப்பிரிகாவில் 2-வது நாளாக தேசிய அளவிலான ஊரடங்கு முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

இதையடுத்து, வரிசையில் நின்றாலும் பரவாயில்லை ஒருவரையொருவர் இடித்து கொண்டு சமூக விலகலைக் கடைபிடிக்காத காரணத்தினால், உடனடியாக பொலிசார் அங்கு விரைந்து வந்து எச்சரித்தனர்.

ஆனால் மக்கள் கேட்காத காரணத்தினால் பிறகு அவர்களைக் கலைக்க ரப்பர் புல்லட்களால் சுட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஷாப்பிங் வந்த மக்கள் அதிர்ச்சியில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பதற்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட குழந்தையுடன் வந்தவர்கள் கீழே விழுந்தனர்.

இதைவிடவும் காட்டுமிராண்டித்தனமாக மக்களை ஆடு மாடுகள் போல் சாட்டையை சொடுக்கி சமூக விலகல் விதிகளை நடைமுறைப்படுத்தினர்.

தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். ஆனால் பல ஏழை மக்கள் உத்தரவை ஏற்காமல் உணவுக்காக வெளியே வர நேரிட்டது. தென் ஆப்பிரிக்காவில் 1,170 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்