ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகளுக்கு ஆதரவாக 4 மில்லியன் முகமூடிகளை அனுப்பி வைத்த சீனா

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா பலி எண்ணிக்கையானது தீவிரமடைந்து வரும் ஐரோப்பாவிற்கு உதவும் விதமாக, சீனா 4 மில்லியனுக்கும் அதிகமான முகமூடிகளை அனுப்பி வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து கருவிகளையும் உலகநாடுகள் பெற்று வரும் நிலையில், சீனாவிலிருந்து 4 மில்லியனுக்கும் அதிகமான முகமூடிகளின் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஏர்பஸ் விமானம் சனிக்கிழமையன்று ஸ்பெயினில் தரையிறங்கியதாக ஐரோப்பிய விமானத் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

COVID-19 நெருக்கடியை சமாளிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகியவற்றின் சுகாதார அமைப்புகளுக்கு கூடுதல் முகமூடி விநியோகங்களை வழங்குவதற்காக சீனாவிலிருந்து விமானம் பிறந்ததாக ஏர்பஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்