வேண்டுமென்றே 11 பேருக்கு கொரோனாவை பரப்பிய இளைஞர்: 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

வேண்டுமென்றே 11 பேருக்கு கொரோனாவை பரப்பியதற்காக, இளைஞர் ஒருவர் 15 ஆண்டுகள் வரை சிறைக்கு செல்ல இருக்கிறார்.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த Eric Torales (24) என்னும் இளைஞர் அமெரிக்காவிலிருந்து அர்ஜெண்டினா திரும்பிய நிலையில், தன்னைத்தான் தனிமைப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஆனால் தனிமைப்படுவதற்கு பதிலாக, அவர் மார்ச் மாதம் 14ஆம் திகதி, 100 பேர் கலந்துகொண்ட பார்ட்டி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

மார்ச் 19ஆம் திகதி உடல் நலக்குறைவால் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட Toralesக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

அவருடன் பார்ட்டியில் கலந்துகொண்ட 11 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அவரால் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில், தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ஒரு 15 வயது பெண்ணும் அடக்கம்.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தவிர, மேலும் 20 பேர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

11 பேருக்கு கொரோனாவை பரப்பியதாக Torales மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், Toralesக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்