24 மணி நேரத்தில் 832 உயிரிழப்புகள்: மிக மோசமான நாளை அனுபவிக்கும் ஸ்பெயின்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 832 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவிட்-19 வைரஸ் தாக்குதலால் உலகளவில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28000 ஐ தாண்டியுள்ளது.

இந்த நிலையில் ஸ்பெயினில் வைரஸ் தாக்குதலால் ஒரே நாளில் 832 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இது வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 769 கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இதன்மூலம் ஸ்பெயினில் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,690 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,248 ஆக உயர்ந்துள்ளது.

4,575 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, 12,285 பேர் குணமடைந்திருப்பதாக ஸ்பெயினின் சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்