ஒட்டுமொத்த குடும்பமும் மருத்துவனையில் அனுமதி: குட்டிகளை ஈன்று 40 நாட்களாக தவித்த பூனை

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தனது உரிமையாளரின் குடும்பத்தை சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் கொரோனா வைரஸுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 40 நாட்களுக்கு மேல் வாழ்ந்து அவர்களுடைய பூனை உயிர்பிழைத்துள்ளது.

லு லீ என்று அழைக்கப்படும் ஒரு பூனையானது கொரோனா வைரஸ் வெடிப்பதற்கு முன்பே கர்பமடைந்துவிட்டது. ஆனால் ஜனவரி 25 அன்று அவர்களுடைய வீட்டில் உள்ள அனைவரும் உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 7 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் வீட்டில் கர்ப்பமாக இருந்த அவர்களுடைய பூனை, நான்கு குட்டிகளை ஈன்றதுடன், தனியாகவே வீட்டில் சுற்றி திரிந்துள்ளது.

மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர், அதன் உரிமையாளர் பூனைக்கு வைக்கும் இரண்டு உணவு பைகளை மறதியில் திறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். நல்லவேளையாக, தினமும் அதனை சாப்பிட்டு பூனை தாக்குபிடித்துள்ளது.

மேலும், மீன் வளர்க்கும் தொட்டியில் இருந்த நீரை தாகத்திற்கு பருகி வந்துள்ளது. 40 நாட்களுக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பிய உரிமையாளரின் மனைவி, வீட்டில் நான்கு குட்டிகளுடன் தங்களது பூனை உயிருடன் சுற்றித்திரிவதை பார்த்து பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்