Fact Check : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரவிய தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அதில் உண்மையில் என தெரியவந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னர் சிறிது நேரத்தில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவியது.

ஆனால் இது தொடர்பாக அதிகாரபூர்வமாக எதுவும் செய்தி வெளியாகவில்லை.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த பாகிஸ்தான் செனட் உறுப்பினர் பைசல் ஜாவித் கான், இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு என்பதில் உண்மையில்லை, இது போன்ற தகவலை பரப்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் சனிக்கிழமை காலை வரை மொத்தம் 1363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்