உலகளவில் பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறை.. மிக அவசரமான அச்சுறுத்தல்! கலங்கிய உலக சுகாதார அமைப்பின் தலைவர்

Report Print Basu in ஏனைய நாடுகள்

உலகளவில் பாதுகாப்பு கருவிகளின் பற்றாக்குறையே இப்போது மிக அவசரமான அச்சுறுத்தல் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது, உலகளவில் 20,000க்கும் அதிகமானவர்கள் பலியானதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.

உயிரைக் காப்பாற்றுவதற்காக பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்குமாறு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளின் உலகளாவிய பற்றாக்குறை இப்போது உயிர்களை காப்பாற்றுவதற்கான எங்கள் கூட்டு திறனுக்கான மிக அவசரமான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என்று டெட்ரோஸ் ஜெனீவா செய்தி மாநாட்டில் கூறினார்.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் உள்ள சுகாதாரத் தொழிலாளர்கள் பணக்கார நாடுகளில் உள்ள அதே பாதுகாப்பு உபகரணங்கள் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், கொரோனாவுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்படாத மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு உலக நாடுகளை கேட்டுக்கொண்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்