கொரோனா தீவிரம்: ‘தவிர்க்க முடியவில்லை’ .. பிரான்ஸ் பிரதமர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் பரவுவதை குறைக்க ஏப்ரல் 15ம் திகதி வரை பிரான்ஸில் மேலும் இரண்டு வாரங்கள் ஊடரங்கு நீடிக்கப்படும் என்று பிரதமர் எட்வார்ட் பிலிப் தெரிவித்தார்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரான்சில் உள்ள மக்களை மார்ச் 17 முதல் இரண்டு வாரங்கள் வீட்டில் தங்குமாறு உத்தரவிட்டார்.

ஆனால் நாட்டில் தொற்றுநோயின் பாதிப்பு தொடந்து அதிகரித்து வரும் நிலையில் ஊடரங்கு நீட்டிப்பு பிரான்ஸிக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஜனாதிபதியுடனான ஒப்பந்தத்தில், நான் இன்னும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கிறேன் என்று எலிசி ஜனாதிபதி மாளிகையில் பிலிப் கூறினார்.

ஏப்ரல் 1 முதல் கூடுதல் இரண்டு வாரங்கள் என்றால் ஏப்ரல் 15 அன்று பிரான்சில் ஊரடங்கு முடிவுக்கு வரும். ஆனால், தேவைப்பட்டால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் எட்வார்ட் பிலிப் கூறினார்.

ஊரங்கு நடவடிக்கைகளை பிரான்ஸ் மக்கள் நன்கு கடைபிடிக்கின்றன, ஆனால் அவற்றை மீறும் சிலருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித்தார்.

மேலும், முதல் பத்து நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு, இந்த தொற்றுநோயின் தொடக்கத்தில் தான் நாம் இன்னும் இருக்கிறோம் என்பது தெளிவாகிறது என்றும் அவர் எச்சரித்தார்

பிரான்சில் கொரோனாவிற்கு 1,995 பேர் பலியாகியுள்ள நிலையில், 32,964 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்