சீனாவில் வற்புறுத்தப்பட்டு மொட்டையடிக்கப்படும் பெண் செவிலியர்கள்! கண்ணீர்விடும் பரிதாப காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பெண் சீன மருத்துவர்கள் 'வூஹானின் மையப்பகுதிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் உறுதியைக் காட்ட தலையை மொட்டையடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்

சீன மருத்துவமனை தனது பெண் தொழிலாளர்களை வழுக்கை கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது

கடந்த வாரம் தலைமுடி பிரகாசிக்கும்போது மருத்துவர்கள் அழுவதை காட்சிகள் காட்டுகிறது

உள்ளூர் மருத்துவர்களுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவதற்காக அவர்கள் வுஹானுக்குச் செல்லத் தயாராகி வந்தனர்

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சையளிக்க மருத்துவமனைக்கு செல்ல தயாராக இருந்த பெண் செவிலியர்கள் கட்டாயப்பட்டுத்தப்பட்டு மொட்டையடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சீனாவின் Gansu மாகாணத்தில் இருக்கும் Women's மற்றும் Children's மருத்துவமனையில் இருந்து 15 பெண் செவிலியர்கள், கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் இடமாக கூறப்படும், வுஹான் பகுதிக்கு செல்ல தயாராக இருந்துள்ளனர்.

இதற்காக அவர்களின் தலையில் மொட்டை அடிக்கப்பட்டது. அப்போது செவிலியர்கள் சிலர் கண்கலங்கிய படி இருந்ததால், அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர், முடியை அளவாக வெட்டலாம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு மருத்துவமனை நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. இது குறித்து மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இணையவாசிகள் பலருக்கு இங்கு இருக்கும் உண்மை நிலை சரியாக தெரியாது, இது இங்கு மட்டுமில்லை, நாட்டின் பல இடங்களில் செவிலியர்கள் மொட்டை அடித்து கொள்வதை நீங்கள் பார்க்க முடியும்.

இதன் மூலம் நோய் தொற்றை தவிர்க்கலாம், சுத்தம் செய்து கொள்வது எளிது, அதுமட்டுமின்றி அவர்களின் விருப்படி தான் மொட்டை அடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இதுவரை 189 குழுக்களில் 21,569 மருத்துவ பணியாளர்களை வுஹானுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்