ஆபத்தில் கால் வைத்துள்ள சீன மருத்துவர்கள்! துப்பாக்கியுடன் பொலிசார்... கசிந்த வீடியோ மற்றும் புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் குழுவில் இருக்கும் மருத்துவர்கள் அந்த நோயை பெறும் அபாயத்தில் இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் வுஹான் மற்றும் ஹுபேவில் முகமூடி அணியாமல் இருந்தால், அது மிகப் பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி அங்கிருக்கும் ஏராளமான மக்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த நோயின் காரணமாக 1900-பேர் உயிரிழந்துள்ளனர்,

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் இருந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுகிறார். இதைக் கண்ட சக ஊழியர்கள் அவரை உடனே அருகில் இருக்கும் வீல் சேரில் உட்கார வைக்கின்றனர். அவர் மூச்சுவிடுவதற்கே சிரமப்படுகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அதில் சீனாவில் இருக்கும் மருத்துவர்கள் கொரோனா வைரஸை பெறும் அபாயத்தில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் வேலை செய்து வருகின்றனர்.

மேலும் சீனாவின் ஹுபேவில் உணவுக்கான நெருக்கடி ஏற்பட்டு வருவதால், எந்த நேரத்திலும் கலவரம் ஏற்படலாம் என்பதற்காக எப்போதும் ரோந்து பணியில் பொலிசார் அங்கிருக்கும் உணவகங்களில் துப்பாக்கியுடன் வரும் புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்